தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் அருகே தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.
முன்களப் பணியாளர்களான தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுமார் 50 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா ஊரடங்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதை மேற்படி கூடடமைப்பு சார்பாக இன்று 20/05/21 காலை தூத்துக்குடி முனிசிப்பல் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு ஆண், பெண் இரு பாலருக்கும் வேஷ்டி, சேலை அரிசிப் பை, காய்கறி தொகுப்பு, கிருமி நாசினி, முக கவசம் , கபசுரகுடிநீர் வழங்கினார்
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை, மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு தலைவர் திரு. பிரான்சிஸ், செயலாளர் திரு. மார்க் மகேஸ் , பொருளாளர் திரு. முத்துமாரியப்பன் மற்றும் மாவட்ட இணை செயலாளர் திரு. அண்ணாதுரை, திருசெந்தூர் வட்டர தலைவர் திரு. சதீஸ், சங்க உறுப்பினர்கள் திரு. சாம்ராஜ், திரு. ரூஸ்வெல்ட், திரு. ராஜன், ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, நகர துணைக் கண்காணிப்பாளர் திரு. கனேஷ், தூத்துக்குடி வட பாகம் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர். திரு. வெங்கடேசன், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.