விருதுநகர் மாவட்டம்:-
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பல்வேறு தரப்பினர் பலவகைகளில் பாதிப்படைந்துள்ளனர்.
அந்த வகையில் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சகாயஜோஸ் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் காரியாபட்டி காவல் நிலையத்தினர் முன்னிலையில் திருநங்கைகளுக்கு 10
நாட்களுக்கு தேவையான இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை காரியாபட்டி காவல் நிலையத்தில் திரு.சகாயஜோஸ் அவர்களால் வழங்கப்பட்டது.
அதுசமயம் காவல்நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பலரும் கலந்துகொண்டனர்.