மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காவலர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை நடைபெற்றது
தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS அவர்களின் ஏற்பாட்டில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் உடல் நலனைக் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்தில் மருத்துவர் திருமதி.மாரீஸ்வரி தலைமையிலான மருத்துவ குழுவின் மூலம் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் அனைத்து காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது .மேலும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடித்து கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.