சென்னை: சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் ஏஜாஸ்கான் (34) இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க முயற்சித்தார். நீண்ட நேரமாக இவர் பணம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், அந்த வழியாக ரோந்து வந்த காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் வெளிநாட்டில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு அவர் நேற்று கைது செய்யப்பட்டார். போலி ஏ.டி.எம். கார்டை தயாரித்து கொடுத்ததாக இக்பால் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
