சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேசியக்கொடி ஏற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
பல்வேறு துறைகள் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 51 ஆயிரத்து 901 மதிப்பிலான நலத்திட்ட வழங்கப்பட்டன. 73 போலீசார் உட்பட 465 ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் எஸ்பி செந்தில்குமார், டிஆர்ஓ மணிவண்ணன், திட்ட இயக்குநர் வீரபத்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.