Police Recruitment

மதுரை விளக்குத்தூண் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட விதி மீறிய வாகனங்கள் பறிமுதல்

மதுரை விளக்குத்தூண் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட விதி மீறிய வாகனங்கள் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஊரடங்கு விதியை மீறி சுற்றித் திரியும் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

மதுரையில் முக்கிய பகுதியாக விளக்குத்தூண் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகப்படியான நபர்கள் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித் திரிந்து வந்துள்ளனர், இவர்களை கட்டுப்படுத்தும் விதமாக விளக்குத் தூண் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் அப்பகுதியில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்த இரு சக்கர வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து காவல்நிலையத்தின் வெளியே உள்ள இடங்களில் வரிசையாக அடிக்கி வைத்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்நிலைய சாலையே நிரம்பும் அளவிற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது மேலும் இவ்வாறு ஊரடங்கு விதிமுறையை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த அனைத்து நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் முறையாக நீதி மன்றத்தை அணுகி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.