ஊரடங்கு விதிமுறைகள் குறித்துகாவல்துறைக்கு டி.ஜி.பி., உத்தரவு
முழு ஊரடங்கில் காவல்துறை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நடைமுறைகளை டி.ஜி.பி. திரிபாதி,IPS அவர்கள் அறிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்டவை
நாட்டு மருந்துக் கடை, மெடிக்கல் ஷாப், பத்திரிகை, பால், குடி தண்ணீர் வாகனங்கள் செல்ல அனுமதி உண்டு.
காய்கறி, பழங்கள் அரசு அனுமதியுடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்களில் விற்க அனுமதிக்கலாம்.
ஓட்டல்கள் காலை 6−10, மதியம் 12− 3, மற்றும் மாலை 6− 9 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் இயங்க அனுமதிக்கலாம்.
அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களை தடுக்க கூடாது.
அவசர மருத்துவ தேவை, இறப்பு தொடர்பான காரணங்களுக்கு மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ−பதிவு அனுமதிக்கப்படுகிறது.
அவசர மருத்துவ தேவைக்கு இ−பதிவு இல்லாமலேயே மாவட்டத்திற்குள் பயணிக்க அனுமதிக்கபடுகிறது.
செய்தி, மற்றும் ஊடக நிறுவனங்களின் ஊழியர்கள் வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கவும். ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எந்த வித இடையூறும் கூடாது.
மேற்கண்ட நடைமுறைகளை தவித்து, விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும், வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அனுமதிக்கப்படாதவை.
தக்க காரணமின்றி எந்த நபரும் சாலையில் நடமாடவோ, வாகனத்தில் செல்லவோ, அனுமதி இல்லை. அவர்கள் முககவசம் அணியாமல் நடமாட அனுமதிக்ககூடாது.
இ−பாஸ் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
உணவு, மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறு எந்த கடைகளுக்கும் அனுமதி கிடையாது.
அனுமதிக்கபட்ட நேரம் தவிர ஓட்டல்கள் செயல்பட கூடாது. சாலைகளில் தேனீர் விற்க அனுமதி இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.