தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த மணமகன், அவரது தாய், தந்தை மற்றும் சிறுமியின் தாய், தந்தை உட்பட 5 பேர் கைது
விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மேலமாந்தை பகுதியில் 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களுக்கு உத்தரவிட்டார்.அவரது உத்தரவின் பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் விளாத்திக்குளம் அனைத்து மகளிர்காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. மீராள்பானு தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 17 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டாலங்குளத்தைச் சேர்ந்த சர்க்கரை மகன் மாரிமுத்து (27), அவரது தந்தையான சிவனாண்டி மகன் சர்க்கரை (56), தாயாரான சர்க்கரை மனைவி காமாட்சி (51), பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து தூத்துக்குடி சமூக நல அலுவலர் திருமதி. பொன்னுமாரி அளித்த புகாரின் பேரில் விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தைத் திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.