Police Department News

பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பது முதுமொழி அந்த பசியை போக்க தக்க வழிசெய்தார் குற்றபிரிவு ஆய்வாளர் மற்றும் காவலர்கள்…

விருதுநகர் மாவட்டம்:-

பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பது முதுமொழி அந்த பசியை போக்க தக்க வழிசெய்தார் குற்றபிரிவு ஆய்வாளர் மற்றும் காவலர்கள்…

அருப்புக்கோட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியான புதியபேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் பலரும் தங்கியிருக்கின்றனர்.

அவர்களில் பலரும் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பசிபட்டினியுமாக காலத்தை தள்ளி வருகின்றனர்.

பேருந்து நிலையத்தில் கடைகள் அதிகம் உள்ள இடமென்பதால் ஏதேனும் சில கடைகாரர்கள் இரக்கப்பட்டு ஏதாவது உணவினை தருவார்கள் சிறிதே நிம்மதியில் தினந்தோறும் சிறிது இவர்களுக்கு உண்பதற்கு அரை வயிறு கால்வயிறு என உணவுகிடைத்து வந்த நிலையில்.

ஆனால் தற்சமயம் முழுஊரடங்கு என்பதால் அந்த சிறிய உதவியும் கிடைக்காமல் போனதுதான் இவர்களின் ஒரு வேளை பசிக்குக்குகூட உணவுகிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம்.

அவர்களின் நிலையை கண்டறிந்து அருப்புக்கோட்டை நகர் குற்றபிரிவு ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பா அவர்கள் உணவு பொட்டலங்களை வழங்கினார் அவருடன் சார்பு ஆய்வாளர் திரு.முத்துக்குமார் உட்பட காவலர்களும் உடனிருந்தனர்.

காவல்பணி என்பது மன்னர் காலத்திலிருந்தே மிகவும் உன்னதபணி என்றே கருதப்பட்டதும் கூட இன்றும் அவ்வாறே அந்த காக்கும் பணியிலும் பசித்தவர்களுக்கு அண்ணம் அளிப்பது உயர்வானதாகும் வார்த்தைகள் இல்லை இவர்களின் பணி மென் மேலும் மிளிர போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published.