மதுரை காவல் ஆணையரின் உத்தரவின்படி ஊரடங்கின் போது முதியவர்களை கண்காணித்து அவர்களுக்கு உதவும் போலீசார்
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி முழு ஊரடங்கில் போலீசார் பொது மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகின்றனர், நேற்று முன் தினம் தெப்பக்குளத்தை சேர்ந்த ராமதாஸ் என்ற முதியவர் ரயில்வே மருத்துவ மனைக்கு செல்ல உதவுமாறு அலைபேசியில் போலீசாரிடம் கேட்டார். உடனடியாக அவரது வீட்டிற்கு தெப்பக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சுந்தரபாண்டியன் சென்று மருத்துவ மனைக்கு அவரை அழைத்து சென்றார். சிகிச்சை முடிந்து திரும்பிய ராம்தாஸ் போலீஸ் கன்ரோல் ரூமை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். அதே போல் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு முதியவர்கள் பலர் போலீசாரை தொடர்பு கொண்டதை தொடர்ந்து தினமும் அருகில் உள்ள ஓட்டல்களில் இருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு காவல்நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியெ வசிக்கும் முதியவர்களை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர் அவர்களில் 585 பேரை தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை தங்களிடம் கேட்குமாறு போலீசார் கூறியுள்றனர்.