Police Department News

மதுரை,மேலூர் அருகே கள்ள உறவை கண்டித்த தாய், தங்கையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக, மற்றொரு மகளை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,மேலூர் அருகே கள்ள உறவை கண்டித்த தாய், தங்கையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக, மற்றொரு மகளை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், மேலுார் கீழபதினெட்டாங்குடியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி நீலாதேவி, வயது 47. நேற்று முன்தினம் இரவு இவரது கணவர் தோட்டத்திற்கு, இரவு காவலுக்கு சென்று விட்ட நிலையில். வீட்டில் நீலாதேவி, மகள்கள் மகேஸ்வரி, 27; அகிலாண்டேஸ்வரி, 22, ஆகியோருடன் துாங்கினார். இரவு, 11:00 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த உ.புதுப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார், 27 என்பவர், அரிவாளால் நீலாவதி, அகிலாண்டேஸ்வரியை வெட்டிக் கொலை செய்தார். தகவல் அறிந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்கள், மற்றும் துணை கண்காணிப்பாளர் ரகுபதிராஜா அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் குறித்து, போலீசார் கூறியதாவது :மகேஸ்வரியின் கணவர் கணேசபெருமான். தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். உ.புதுப்பட்டியில் கணவருடன் வசித்தபோது, பொறியியல் பட்டதாரியான சசிகுமாருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர் திருமணம் ஆகாதவர். இதனால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. கணவரை பிரிந்து, பெற்றோர் வீட்டிற்கு மகேஸ்வரி வந்தார். அவரது நடத்தையை பெற்றோரும், தங்கையும் கண்டித்தனர்.

தாயும், தங்கையும் கண்டித்து பேசியதாலும், அலைபேசியில் பேச இடையூறாக இருந்ததாலும், இருவரையும் சசிகுமார் மூலம், மிரட்ட மகேஸ்வரி முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு, தந்தை தோட்டத்திற்கு சென்ற பின், சசிகுமாரை வீட்டிற்கு வரவழைத்தார். இதை எதிர்பார்க்காத நீலாதேவியும், அகிலாண்டேஸ்வரியும் சசிகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமுற்ற சசிகுமார், அவர்களை வெட்டிக் கொலை செய்துள்ளார் அவரையும், மகேஸ்வரியையும் கைது செய்து விசாரணை செய்து வருகிரோம் என காவல் துறையினர் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.