பாலக்கோடு .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பாலக்கோடு காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஊர்வலம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள். காவல் ஆய்வாளர் கவிதா அவர்களின் தலைமையில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணிதல் சாலை விதிகளை பின்பற்றுதல் குழந்தை திருமணம் தடுத்தல் விழிப்புணர்வு போதை பழக்கத்திற்கு ஆளாகாதே ஆகிய பதாகையை ஏந்தி பாலக்கோடு முக்கிய சாலையிலான எம் ஜி ரோடு பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை பாலக்கோடு காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரை மாநகரில் நான்கு வழிப் பறி கொள்ளையர்கள் கைது! அவர்களிடமிருந்து 44 லட்சம் மதிப்புள்ள 120 பவுன் தங்க நகைகள் 4 இரு சக்கர வாகனங்கள் மீட்பு மதுரை மாநகரில் செல்லூர், தல்லாகுளம், கூடல்புதூர், திருப்பாலை, எஸ.எஸ்.காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில் வாகனங்களில் செல்லும் பெண்களை குறி வைத்து அவர்களது தங்க நகைகளை பறித்துச் செல்லும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த தொடர் வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய […]
மதுரை தெப்பகுளம் பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு மையம் திறப்பு மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் எதிரே போக்குவரத்து விழிப்புணர்வு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக போலீஸ் கமிஷனர் திரு. லோகநாதன் IPS அவர்கள் திறந்து வைத்தார் இந்த மையத்தில் வாகன ஓட்டிகளுக்கு தேவையான போக்குவரத்து விழிப்புணர்வு வழிமுறைகள் போலீசார் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் வாகனங்களின் தகுதிச் சான்று இன்சூரன்ஸ் முடியும் நாட்களை அறிதல் வாகனம் மீதான அபராதம் அறிதல் மற்றும் அவைகளை செலுத்தும் முறைகள் காவல் உதவி செயலி […]
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில்கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிடியானை எதிரி கைது. தென்காசி மாவட்டத்தில் சிவகிரி காவல் நிலையம் குற்ற எண் 228/ 2020 SC/ST act வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மீனாட்சி நாதன் அவர்கள் உத்தரபடி சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் இதயத்துல்லா மற்றும் தலைமை காவலர் செல்வம் தலைமையில் வழக்கின் எதிரி […]