விருதுநகர் மாவட்டம்:-
கொரோனா ஊரடங்கனால் உண்ண உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விஜய் ரசிகர் மன்றத்தினர்…
இந்த அரும்பணிகளானது அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் கோவில் வளாகத்தில் மற்றும் சாலைகளின் ஓரத்தில் தங்கி இருக்கும் நபர்களுக்கும் உணவளிக்கப்பட்டது.
நாம் பூமியில் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதற்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நல்லகாரியத்தை செய்துவிட்டு செல்வது வழக்கம்.
ஆனால் தான் வாழும்போதே நற்பணிகளை செய்து வருபவர்களாக அருப்புக்கோட்டை அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் சார்பில் அவர்களது கல்லூரி வாகனத்தில் கல்லூரியில் பணியாற்றுபவர்கள் சிறு குழுவாக வந்து பணிகளை செய்துள்ளனர்.
அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பசியால் வீடு வாசலின்றி தவித்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு உணவளிப்பது புண்யமே.
தானத்தில் எத்தனையோ தானங்கள் இருக்கின்றன இப்புண்யபூமியில் அதில் அன்னதானமும் கூட ஏனென்றால் மிகையாகாது ‘அ’ என்பது தமிழில் முதற் சொல் அதற்கு மகத்துவம் அதிகம் என்பதால் என்னவோ நாம் உண்ணும் உணவை அன்னம்,அதை பறிமாறுபவர்களை அன்னை என்கிறோம் இன்னும் பலவாறு சுட்டிக்காட்டலாம்.
பசித்தோருக்கு உண்ண வைத்து உயிர்காப்பதென்பது மிகவும் அரியதான செயல்களில் ஒன்றாகும் என்பது சான்றோர்களின் வாக்காகும் அவர்களின் வாக்கிற்கிணங்க வாழ்க வளர்க இவர்களின் நற்பணி போலீஸ் இ நியூஸ் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.