விருதுநகர் மாவட்டம்:-
கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோபாலபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
பொதுவாக கொரோனா தொற்றானது கிராமம் நகரம் என பேதமின்றி நோய்தாக்கி வருகிறது.
அந்த நோய்த்தொற்றை பரவாமல் தடுப்பதற்காக அருப்புக்கோட்டை குற்றபிரிவு ஆய்வாளர் திரு.ராஜபுஷ்பா அவர்கள் கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்தார்.
அப்போது பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
அதன் பின்பு கொரோனா விளிப்புணர்வை பற்றியும் அதை வராதவண்ணம் கடைபிடிக்கும் வழிகளை எடுத்துரைத்தார்.