ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்
கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வரும் நிலையில் மதுரை வாழ் மக்கள் போதிய வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அதிலும் குறிப்பாக மாற்றுத்திரனாளிகள் நிலைமையை சொல்ல வேண்டியதே இல்லை, அவர்களின் வாழ்வாதாரத்திற்து உதவும் வகையில் மதுரை மாநகர் S.S.காலனி,C.3 ,காவல்நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பிளவர் ஷீலா அவர்கள் S.S.காலானி C ,காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கும் இறையியல் கல்லூரியில் வைத்து பார்வையற்ற மாற்றுத்திரனாளிகள் 25 நபர்களுக்கு அரிசிப் பை, காய்கறித் தொகுப்பு மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கினார்.
மேலும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முறையையும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் முறைகளையும் எடுத்துரைத்தார். கொரோனா வைரஸ் மனிதர்கள் தொற்றி வாழ்ந்து வருகிறது நாம் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தினால் அவை மனிதர்கள் மீது பரவ முடியாமல் இறந்து விடும் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் சென்று வந்தால் நன்கு சோப்பு போட்டுகைகளை சுத்தம் செய்ய வேண்டும், முகக் கவசம் நல்ல முறையில் சரியாக அணிய வேண்டும், கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிற்க வேண்டும், அப்படியே தவிற்க முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டிற்கு வந்தவுடன் நன்கு சோப்பு போட்டு குளிக்க வேண்டும், இவ்வாறு சுகாதார முறைகளை பின்பற்றினால் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்து நாம் தப்பிக்கலாம், என்றார்.