ஊரடங்கு காலத்தில் முதியவர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் உணவு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முத்துகுமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினரின் முயற்சியால் பெரியகுளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட G.கல்லுப்பட்டி கிராம பகுதிகளில் உள்ள சுமார் 60 க்கும் மேற்பட்ட முதியோர்கள், ஆதரவற்றவர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.சாய்சரண் தேஜஸ்வி IPS, அவர்கள் உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்.
மேலும் கொரோனா நோய் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எடுத்து கூறி விழிப்புணரவு மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். உடன் பெரியகுளம உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் உடன் இருந்தார். இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.