கீழவளவு அருகே மர்மமான முறையில் கோவில் மாடு இறந்து கிடப்பதை கண்ட கிராம பொது மக்கள் சட்ட நடவடிக்கை எடுக்க கீழவளவு காவல் நிலையத்தில் புகார் மனு
பெரும்பாளப்பட்டி கிராமத்திற்கு சொந்தமான முத்தம்மாள் கோவில்
கோவில் மாடு அனைவராளும் பாசமாக வளர்க்கப்பட்டு வந்தது இந்த கோவில் மாடு பல மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளது நேற்று 4 ஆம் தேதி முதல் கோவில் மாட்டை காணவில்லை அக்கம்பக்கம் தேடிப் பார்க்கும் போது பக்கத்து ஊரான பண்ணி வீரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் வீரய்யா, மற்றும் அதே பகுதியை சேர்ந்த மெய்யன் மகன், கருப்பையா என்பவர்களின் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்ட கிராம மக்கள் மாட்டின் வயிற்றுப் பகுதியில் மின்சாரம் தாக்கி இறந்து இருப்பது போல் வயிற்றில் உள்ள பெரிய காயங்களுடன் உடைய தழும்பு இருந்தது இதனால் சந்தேகம் அடைந்த கிராமத்தினர் பெரும்பாளபட்டியை சேர்ந்த முக்கியஸ்தர் அய்யங்காளை மகன் அய்யனார் வயது 46/21,
என்பவர் கீழவளவு காவல் நிலையத்தில் மாட்டின் இறப்பு குறித்து சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க கூறி புகார் மனு அளித்ததின் பேரில் கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முருக ராஜா அவர்கள் வழக்கு பதிவு செய்து மேற்படி மாட்டின் இறப்பு குறித்து உண்மை தன்மை அறிய முத்துச்சாமிபட்டி கால்நடை மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் சம்பவ இடத்தில் வந்து இறந்த கோவில் மாட்டை போஸ்ட்மார்டம் செய்துள்ளார்கள் மேற்படி பருத்தி தோட்டத்தின் உரிமையாளர்களான வீரையா மற்றும் கருப்பையா ஆகியோரை பிடித்து கீழவளவு காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.