விருதுநகர் மாவட்டம் :-
ஶ்ரீவில்லிபுத்தூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது.
ஶ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம் அருகில் அரசு கூட்டுறவு பால் கொள்முதல் நிலையம் உள்ளது.
இந்த பால்கெள்முதல் நிலையத்தில் தனது வீட்டுக்கு தேவையான பாலை காலை 6.15 மணிக்கு வாங்கிவிட்டு சகுந்தலா(65) க/பெ லேட் முனியசாமி என்பவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மறைந்து இருந்து நோட்டமிட்ட ரயிட்டன்பட்டி தெருவை உள்ள அலெக்ஸ் பிரேம்குமார் (23) த/பெ ஜான்சன் என்பவன் தீர்த்தவாரி மண்டபம் அருகில் சகுந்தலா வந்தவுடன் சகுந்தலா கழுத்தில் இருந்த மூன்று பவுண் தங்க நகையை பறித்துவிட்டு ஓடிவிட்டான்.
அதிகாலை என்பதால் சகுந்தலா கூச்சலிட்டும் யாரும் அருகில் இல்லை
பின்னர் சகுந்தலா காலை 7.15 மணிக்கு நகர் காவல் நிலையத்தில் நகர் காவல் ஆய்வாளர் திருமதி வினிதா அவர்களிடம் புகார் மனு கொடுத்தார்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் திருமதி வினிதா அவர்கள் இந்த புகார் மனுவை குற்றபிரிவு சார்பு ஆய்வாளர் திரு ஆறுமுகசாமி அவர்களிடம் ஒப்படைத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட திரு ஆறுமுகசாமி அவர்கள் விசாரணையை ஆரம்பித்தார் மேலும் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
சகுந்தலா கூறிய அடையாளங்களையும் அருகில் இருந்த CCTV காட்சிகளையும் ஒப்பிட்டு பார்த்தபோது அலெக்ஸ் பிரேம்குமார் என்பது தெரியவந்தது.
பின்பு நண்பகல் 3.00மணியளவில் திருடனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவனை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் அப்போது நான்தான் திருடினேன் என்பதை ஒப்புக்கொண்டான்.
அதன்பிறகு அலெக்ஸ் பிரேம்குமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்
திருட்டு சம்பவம் நடந்த 8மணிநேரத்திற்குள் திருடனைபிடித்த குற்றபிரிவு சார்பு ஆய்வாளர் திரு ஆறுமுகசாமி அவர்களை துணை காவல் கண்காணிப்பாளர் திரு நமசிவாயம் அவர்களும் நகர் ஆய்வாளர் திருமதி வினிதா அவர்களும் வெகுவாக பாராட்டினர்.