
காவல் துறையில் காவலர்கள் பற்றாகுறை. அதிகரிக்கும் குற்றங்கள்
மதுரை அருகே மேலூரில் போலிசார் பற்றாகுறையால் அதிகரிக்கும் குற்றங்களால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடுதல் போலிசாரை நியமித்து குற்றங்களை தடுக்க எஸ்.பி.,அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 45 போலிசாரில் பாதுகாப்பு நீதிமன்றம் உள்ளிட்ட பணிகளுக்கு 35 பேர் சென்று விடுகின்றனர். மீதமுள்ளவர்களால் ரோந்து செல்ல முடியாத நிலையில் குற்றங்கள் அதிகரிக்கின்றன.
பொது மக்கள் கூறியதாவது நேற்று முன் தினம் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடந்தது. கூடுதல் போலிசாரை நியமித்து ரோந்து வரவும் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
எஸ்.பி., கூறுகையில் கூடுதல் போலிசாரை நியமித்து குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
