விருதுநகர் மாவட்டம்:-
பசியால் உண்ண உணவின்றி தவிப்போருக்கு மூன்று வேளையும் உணவு…
அருப்புக்கோட்டை நகரில் புதியபேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சொக்கலிங்கபுரம் சொக்கநாதர் கோவில் வாசல் முதலிய இடங்களில் திக்கற்றோர் சிலர் உள்ளனர்.
அவர்களுக்கென்று வீடு,வாசல் என்பது கிடையாது மேற்கூறிய இடங்கள்தான் இவர்களுக்கு வீடு,வாசல்.
இவர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் அன்றாடம் உணவு என்பது மிகவும் அரிதாகிவிட்டது.
அதை போக்கவேண்டும் என்பதற்காக நகர் காவல் துறையினரின் சார்பாக தினந்தோறும் சாலையே வீடாக நினைத்து வசிப்பவர்களுக்கு மூன்று வேளையும் தேடிச்சென்று உணவளித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை நகர் காவல் துறையின் இந்த தொடர் பணியால் இவர்கள் மூன்று வேளையும் வயிராற உணவை உண்டு வருகின்றனர்.
காவல் துறையினர் இவர்களுக்கு செய்கின்ற பணியானது மிகவும் பாராட்டுக்குறியது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.