கீழவளவு அருகே நாயத்தான் பட்டியில் சட்டவிரோதமாக வெளிமாநில மது டப்பாக்கள் நூதன முறையில் விற்பனை செய்த இருவர் கைது
மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலைய வட்ட ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள், கீழவளவு சார்பு ஆய்வாளர் முருகராஜா,மற்றும் மேலூர் குற்றப்பிரிவு காவலர்கள், தலைமை காவலர்கள் முருகேசன் அரபிமுகமது, ஆகியோர்கள் மதுவிலக்கு ரோந்துப் பணியில் இருந்த போது ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாயத்தான்பட்டி பகுதியில் சென்ற போது, அங்கே வெளிமாநில மதுடப்பாக்கள் விற்பனையில் இருவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தது தெரியவந்தது அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் நாயத்தான்பட்டியை சேர்ந்த வீரணன் மகன் நாகராஜ், மாயன் மகன் முனியசாமி, என தெரிய வந்தது அவர்களிடமிருந்து 60 மது டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன,மேலும் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்த இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.