குரோம்பேட்டையில் “0” Violation Traffic Junction ஐ தொடங்கி வைத்து சாலை விதிமுறைகளை பற்றிய அறிவுறைகளை DR திருமதி.செந்தில்குமாரி IPS ( Joint commissioner of police Traffic South) அவர்கள் மூலம் நடைப்பெற்றது
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி புனித தோமையர் மலை மாவட்டம் கட்டுப்பாட்டில் உள்ள காவல்நிலைய பகுதி மக்களுக்கு காவல்துறை அதிகாரிகளான திரு. DR.P.K Senthil Kumari IPS ( Joint commissioner of police Traffic (South) அவர்கள் ” 0″ Violation Traffic Junction முகாமை தொடங்கி வைஷ்ணவ கல்லூரி எதிரில் உள்ள சிக்னலில் சாலை விதிமுறைகளை சரியாக பின்பற்றாத வாகன ஓட்டிகளை அழைத்து நாற்காலியில் அமரவைத்து உயிர் பாதுகாப்பு பற்றிய சாலை விதிமுறைகளையும் மற்றும் அறிவுரைகளையும் வழஙகி மற்றும் சரியான படி விதிமுறைகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் திரு. KUMAR (Deputy commissioner of police Traffic -South) மற்றும் திரு A.Balasubramanian (Assistant Commissioner of police Traffic)அவர்கள் கொரோனாவிலிருந்து பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் உயிரை கொரோனா பெருந்தொற்றிலிருந்து காப்பாற்றி வருகிறார்கள்.
அதுமட்டுமன்றி சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் திரு .பாலசுப்ரமணியன் அறிவுறுத்தலின் படி குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் பந்தல் அமைத்து நாற்காலியில் அமர வைத்து மக்களை S11 தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஜெய்குமார் தலைமையில் தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் பகுதிவாழ் மக்களுக்கு குரோம்பேட்டை போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.சிவா அவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அதுமட்டுமின்றி திரு.ஜெய்குமார் அவர்கள் கொரோனா முழு ஊரடங்கில் தினம் தோறும் மக்களுக்கு தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சமூக இடைவெளியோடு முதலில் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பதை வலியுறுத்தியும் கபசூர குடிநீர்,முககவசம்,கிருமிநாசினி வழங்கியும் தினம் தோறும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு, தண்ணீர் பாட்டில், ஊட்டச்சத்து உணவு மற்றும் நோய் எதிர்ப்பு மருந்து பொருட்கள் மற்றும் வடமாநிலத்தை சார்ந்தவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
அதுமட்டுமன்றி கொரோனா விதிமுறைகளை மீறி காரணமின்றி ஊர் சுற்றும் மற்றும் e Pass இல்லாமல் வாகனத்தில் சுற்றுபவரை வாகன தணிக்கையின்போது வாகனத்தை அபராதம் விதித்தும் வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர்.இப்படி மக்களை கொரோனாவிலிருந்து முற்றிலும் மீட்டு படிப்படியாக குறைத்து வரும் காவல்துறையினர் தங்களுடைய பணியை சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார்கள்.சென்னை பெருநகர காவல்துறைனரின் நல்ல செயல்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்.