கீழவளவு அருகே அரியூர் பட்டியில் நிலத்தகராறில் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட அடிதடி பிரச்சனையில் 25 பேர்கள் மீது வழக்குப் பதிவு
கீழவளவு அருகே அரியூர்பட்டியில் நிலத்தகராறில் இரண்டு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட அடிதடியில் 25 பேர்கள் மீது வழக்கு இந்த அடிதடி பிரச்சனையில் காயம்பட்டு 12 நபர்கள் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள், அரியூர் பட்டியில் லட்சுமணன் என்பவர் பவர்டில்லர் நிலம் உழுகும் இயந்திரத்தை அதே ஊரைச் சேர்ந்த போஸ் என்பவரின் நிலத்தில் ஓட்டிச் சென்றுள்ளார் இதை போஸ் என்பவர் எனது நிலத்தில் எதற்கு உன்னுடைய பவர்டில்லர் இயந்திரத்தை கொண்டு வருகிறாய் என கேட்டபோது இருவருக்கும் அடிதடி பிரச்சனை ஏற்பட்டு பிறகு இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் பெரும் பிரச்சனையாக ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முருகராஜா அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரிகளை தேடி வருகிறார்கள்.