Police Department News

மதுரை மகபூப்பாளையத்தில் கடன் தொல்லையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட ஓட்டல் அதிபர்

மதுரை மகபூப்பாளையத்தில் கடன் தொல்லையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட ஓட்டல் அதிபர்

மதுரை மாநகர் S.S.காலனி C3, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை மெகபூப்பாளையம் அன்சாரி நகரில் வசித்து வந்தவர் முகமதுஅலி வயது 34/21, இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளன.இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்.

இவர் தன் கடையை மேம்படுத்துவதற்காக செல்வக்குமார் எனபவரிடம் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார், ஊரடங்கு காரணமாக கடை மூடப்பட்டது இதனால் முகமது அலிக்கு போதுமான வருமானம் இல்லை அவரால் உரிய நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே முகமதுஅலி நேற்று முன்தினம் செல் போனில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தான் தொழில் அபிவிருத்திக்காக கடன் வங்கினேன் கடன் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு தொல்லை கொடுக்கின்றனர். வாங்கிய பணத்தை காட்டிலும் அதிக பணம் கொடுத்த நிலையிலும் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் எனவே தான் தற்கொலை செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.

இவரிடம் கூடுதல் வட்டி கேட்டு தொந்தரவு செய்து வரும் செல்வகுமாரும் அவர்களது கூட்டாளிகள் ஜெய்சிங், மாரிமுத்து உள்ளிட்டோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் .தான் இறந்த பிறகு தன்னுடைய மனைவி மற்றும் நண்பர்களுக்கு யாரும் தொல்லை கொடுக்ககூடாது எனவும் அதில் கூறியிருந்தார் அதன் பிறகு முகமது அலி தன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த S.S. காலனி C3, காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி பிளவர்ஷீலா அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார் அதன் பின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

முகமது அலியின் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் அவரது மனைவி பாத்திமா அளித்த புகாரின் அடிப்படையிலும் காவல் துறையினர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், கோச்சடையை சேர்ந்த காமாக்ஷி , வில்லாபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து, கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயேந்திர சிங், ஆகிய நான்கு பேர் மீது S.S.காலனி காவல் துறையினர் கந்துவட்டி தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.