மதுரை, சமயநல்லூர் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் மது விருந்தில் வாலிபர் படுகொலை
மது விருந்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வாலிபர் படு கொலை செய்யப்பட்டார். டாஸ்மாக் கடை திறந்த அன்றே இந்த பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் விக்னேஷ்வரன் என்ற விக்கி வயது 26/21, இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் முள்ளிப்பள்ளம் கிராமத்தின் உள்ள தென்னந்தோப்பில் விக்னேஷ்வரனும் அவரது நண்பர்களும் மது விருந்துக்கு ஏற்பாடு செய்து ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.மது போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் விக்னேஷ்வரனை கத்தியால் சரமாரி குத்தியும் மற்ற பயங்கரமான ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர், இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனே அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இது குறித்து தகவலறிந்த காடுபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விக்னேஷ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பந்தமாக தனிப் படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை திறந்த அன்றே மது விருந்து வைத்து அதன்மூலம் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு படுகொலை நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.