மதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
சென்னை சென்ரல் ரயில் நிலையம், மற்றும் மதுரை ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று ரயில்வே போலீசாருக்கு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து ரயில்வே போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் சரவணகார்த்திக் என்பதும் அவர் பி.டெக் படித்து மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர் என்பதும் தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சென்ரல் மற்றும் மதுரை ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.