Police Department News

திண்டுக்கல் அருகே ரயில்வே நடை மேடையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்

திண்டுக்கல் அருகே ரயில்வே நடை மேடையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரயில் நிலையத்தின் முதல் நடை மேடையில் உள்ள பெயர் பலகை அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் 2 மயில்கள் இறந்த நிலையில் கிடந்தன்.

அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அய்யலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் அய்யலூர் வனக் காப்போளர் திருமதி கிரேசி உஷாதேவி, வன காவலர் தங்கராஜ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மயில்களின் உடல்களை மீட்டனர்.

பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் 2 மயில்களும் இன்று காலை வேளையில் சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வடமதுரை அரசு கால்நடை டாக்டர் நாகராஜன் அவர்கள் மயில்களின் உடலை பரிசோதனை செய்தார். அதில் இறந்து போனது ஒன்று ஆண் மயில், மற்றொன்று பெண் மயில் என தெரிய வந்தது. அவைகள் ரயிலில் அடிபட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் இறந்து போன மயில்களை வனப்பகுதில் புதைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.