மதுரை நகர், மற்றும் புறநகர் காவல் நிலையங்களின் எல்லைகள் பிரிப்பு. அவனியாபுரம் காவல் நிலையத்தின் எல்லையின் கீழ் மதுரை விமான நிலையம்
காவல்துறையின் நிர்வாக வசதிக்காக மதுரை நகர், மற்றும் புறநகர் காவல் நிலையங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி மதுரை விமானநிலைய பகுதிகள் பெருங்குடி காவல் நிலையத்திற்கு பதில் அவனியாபுரம் காவல் நிலையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது, மதுரை, சுப்ரமணியபுரம் காவல்நிலையத்திற்குட்பட்ட பசுமலை, முனியாண்டிபுரம், மாடக்குளம், பகுதிகள் திருப்புரங்குன்றம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அவனியாபுரம் பிரசன்னா காலனி ரிங் ரோடு வடபகுதி, சின்ன உடைப்பு முதல் சேர்மத்தாய் வாசன் கல்லூரி சந்திப்பு வரையிலான பகுதிகள் பெருங்குடி காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அனுப்பானடி, சிந்தாமணி, வார்டு 57,58,.பகுதிகள் அனைத்தும் கீரைத்துறை காவல்நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. வில்லாபுரம் புறநகர், தென்றல் நகர், அம்பேத்கார் நகர், ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தின் கீழ் வருகின்றன.
சேர்மத்தாய் வாசன் கல்லூரி சந்திப்பு முதல் கல்லம்பல் பாலம் தெற்கு புறம் அய்யனார் புறம் வரை இனி சிலைமான் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. ஆஸ்ட்டின்பட்டி காவல்நிலையத்திற்குட்பட்ட தனக்கன்குளம் விளாச்சேரி பஞ்சாயத்திற்குட்பட்ட 36 பகுதிகள் திருநகர் காவல் நிலையத்தின் கீழ் வருகிறது. திருநகர் காவல் நிலையத்திற்குட்பட்ட ஓம் சக்தி நகர், ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தின் கீழ் வருகிறது.