மதுரை மேலவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர்களை கைது செய்த திடீர் நகர போலீசார்
மதுரை மாநகர் C1, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பணராஜ் அவர்கள் நிலையத்தில் பணியில் இருக்கும் போது காலை சுமார் 11. 50 மணியளவில் அவரது ரகசிய தகவலாளி ஒருவர் நிலையம் வந்து கொடுத்த ரகசிய தகவலின்படி மதுரை மேலவாசல் அருகே அம்மா உணவகம் பின்புறம் சிலர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பதாக அறிந்து ஆய்வாளர் திரு முகமது இத்ரீஸ் (பொறுப்பு) அவர்களிடம் தகவல் தெரிவித்து அவரின் உத்தரவின்படி சக காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர் காவலர்களை கண்டவுடன் தப்பியோட எத்தனித்தவர்களை காவலர்கள் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் விட்டப்பாமணி மகன் மாம்மலை வயது 22/21, பெருமாள் மகன் மணிகண்டன் என்ற சின்டெக்ஸ் மணி, வயது 20/21, பொன்னுச்சாமி மகன் பொன்மனி வயது 17/21, மூக்கையா மகன் சூரியா என்ற ஏசு, வயது 20/21, அழகர் மகன் விக்னேஸ் வயது 20/21, அம்மாசி மகன் ஹரிச்சந்திரன் என்ற பாண்டி வயது 20/21, கருப்பையா மகன் பாலமுருகன் என்ற புகாரி வயது 22/21, என தெரிய வந்தது. உடனே அவர்களை பிடித்து சோதனை போட்டதில் அவர்களிடம் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதியை மயக்கும் கஞ்சா என்ற போதை பொருள் சுமார் 24 கிலோ விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்து அது பற்றி விசாரித்த போது அவர்கள் அதை தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இனம் தெரியாத நபர்களிடம் மொத்தமாக வாங்கி வந்து சில்லரை விற்பனையாக அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து வந்ததாக தங்களது குற்றத்தை ஒப்பு கொண்டதை தொடர்ந்து அவர்களை கைது செய்து நிலையம் அழைத்து வந்து அவர்களின் மீது ஆய்வாளர் முகமது இத்ரீஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பணராஜ் அவர்கள் வழக்கு பதிவு செய்தனர். மேற்படி வழக்கை ஆய்வாளர் முகமது இஸ்ரிஸ் அவர் தீவிரமாக விசாரித்து வருகிறார்.