Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பழங்களை வைத்து மது தயாரித்து விற்பனை செய்த நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார்

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பழங்களை வைத்து மது தயாரித்து விற்பனை செய்த நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார்

மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலைய சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளர் திரு.C.கார்த்திக் அவர்கள் கடந்த 20 ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் கொரோனா நோய் தொற்று காரணமாக அரசு மது பானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் சரகத்தில் யாரும் சில்லரையாக மது விற்பனை செய்து வருகிறார்களா? என கண்காணித்து நிலைய முதல்நிலை காவலர் திரு. கிஷோர்குமார், முதல்நிலை காவலர் திரு. மதன்குமார், ஆகியோர்களுடன் சரக ரோந்து செய்து வந்த போது மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகர் 1 வது தெரு பள்ளிவாசல் எதிரில் இரண்டு நபர்கள் பழங்கள் வைத்து மது தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டு அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் மதுரை ஜீவா நகரை சேர்ந்த நாகப்பாண்டியன் மகன் அழகேஸ்வரன் வயது 33/21, அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கபாலீஸ்வரன் வயது 19/21, என தெரிய வந்தது, அவர்கள் பழங்களை வைத்து மது தயாரித்து விற்பனை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர்களை கைது செய்து ஆய்வாளர் திரு, கதிர்வேல் அவர்களின் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர் அதன்பின் நீதி மன்றத்தின் உத்தரவின்படி அவர்களை சிறையிலடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.