ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கொரோனா நோய் தொற்றிற்கு பலி
ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ரவி வயது 56, இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக உடல் நல குறைவு ஏற்பட்ட நிலையில் இவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்காக ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மேல் சிகிச்சைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா தொற்றால் உயிரிழந்த ரவி சார்பு ஆய்வாளருக்கு ஒரு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.
