குஜராத் மாநிலம், பாஞ்ச்மஹல் மாவட்டத்தில், ஜம்புகோடா பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் பேய்கள் மீது வழக்குப் பதிவு
குஜராத் மாநிலத்தில் சேர்ந்த பாஞ்ச்மஹல் மாவட்டத்தில் உள்ள ஜம்புகோடா அருகே உள்ள ஒரு கிராமத்தில் காவல்நிலையத்தில் பேய்கள் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்புகோடா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னை வேலை செய்ய விடாமல் கொலை செய்து விடுவதாக இரண்டு பேய்கள் கொலை மிரட்டல் விடுவதாக புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பேய்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குஜராத்தில் உள்ள பாஞ்ச்மஹல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் அங்குள்ள காவல்நிலையத்திற்கு தலைதெறிக்க பதட்டத்துடன் ஓடி வந்தார், அவரை ஆசுவாசப்படுத்திய போலீசார் தண்ணீர் கொடுத்து அமைதிபடுத்தி விசாரித்தனர், அவருடைய தோட்டத்தில் அவரை வேலை செய்ய விடாமல் இரண்டு பேய்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் கொலை செய்து விடுவோம் என மிரட்டுவதாகவும் புகார் அளித்தார். இதை கேட்டு அதிர்சியடைந்த காவலர்கள் அரண்டுபோய் என்ன செய்ய வேண்டுமென கேட்க, அவர் அந்த பேய்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் அந்த பேய்கள் போலீசுக்கு பயந்து ஓடி விடும் என கூறியுள்ளார். அவர் இவ்வாறு தொந்தரவு செய்யவே, வேறு வழியில்லாமல் போலீசார் பேய்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன் பின் அவருடைய குடும்பத்தாரை அழைத்து விசாரித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் 10 நாட்களாக மத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது தெரிய வந்தது. குடும்பத்தாரை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறி, புகார் கொடுத்த நபருக்கு ஆறுதல் கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசாரின் இந்த சாமர்தியமான செயல் மிகவும் பாராட்டுதலுக்குறியது. போலீசார் எப்படியெல்லாம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதுள்ளது!
