ஈரோட்டில் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகக் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு கட்ட ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஈரோட்டில் மேம்பாலங்களில் ஊரடங்கு காரணமாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை 45 நாட்களுக்கு மேலாக மேம்பாலத்தை அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று முதல் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தில் செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர்.
