காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்

காவலர் தின நல்வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் காவலர்கள்
பேட்டரி திருடியவர் கைது மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா வயது (31) இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது ஆட்டோவில் இருந்த பேட்டரியை எல்லீஸ் நகரை சேர்ந்த இப்ராஹிம் வயது (42) என்பவர் திருடினார். மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து இப்ராஹீமை கைது செய்தனர்.
சுரண்டையில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 7 பேர் கைது தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சுரண்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் 7 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சுரண்டை […]
மாடக்குளம், சாலையில் விட்டுச் செல்லப்பட்ட முதியவரை மீட்ட S.S.காலனி காவல் துறையினர் மதுரை, மாடக்குளம் பகுதியில் சாலையில் விடப்பட்டு சென்ற முதியவரை S.S.காலனி காவல் துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மதுரை, S.S.காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான மாடக்குளம், பெரியார் நகர் கிழக்குத் தெரு அருகில் ஆதரவற்ற நிலையில் 80 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் நடமாட இயலாமல், முள் இரும்பு மற்றும் பாம்புகள் அதிகம் உள்ள பகுதியில் படுத்தபடுக்கையாக கிடந்தார். இதனை தொடர்ந்து அந்த பகுதி […]