விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டையில் வங்கிகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடர்பாக அனைத்து வங்கி அதிகாரிகளுடனான ஆலோசணை கூட்டம் நகர் காவல் நிலையத்தில் நடைபெற்றது
வங்கிகளில் பணம் எடுத்துச் செல்வோரை கண்காணித்து அவர்களை பின்தொடர்ந்து பணத்தை திருடும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது
இந்நிலையில் இன்று(3.7.21)
அருப்புக்கோட்டையில் வங்கிகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடர்பான அனைத்து வங்கி அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நகர் காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் மற்றும் நகர் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வங்கிகளில் மட்டுமல்லாமல் சுற்றி உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்.
வங்கி வாடிக்கையாளர்களை கவனமுடன் இருக்க சிறிய ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதிய அளவு செக்கியூரிட்டிகளை நியமிக்க வேண்டும், தொடர்ந்து மீண்டும் மீண்டும் அதிக அளவு நகைகளை அடகு வைக்கும் நபர்கள் பற்றிய விபரத்தை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் வங்கியிலிருந்து பணம் எடுத்து செல்லும் வாடிக்கையாளர்களை கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும் எனவும்.
அதேபோல் சந்தேகப்படும் படியான நபர்கள் வங்கி அருகிலோ வங்கியிலோ தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அனைத்து பொதுத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.
