மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில்தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
தேசிய ஒற்றுமை நாளான இன்று (31.10.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் காவல் துணை ஆணையர் (வடக்கு) Dr.புக்யா சிநேக பிரியா IPS., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு.T.மங்களேஸ்வரன் அவர்கள், காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் அனைவரும் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைபாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு எங்களையே உவந்தளிப்போம் என்றும்,இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவோம் என்றும் உளமார உறுதியளிக்கிறோம்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கபட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நாங்கள் இந்த உறுதிமொழியினை ஏற்கிறோம்.எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எங்களது பங்களிப்பினை நல்குவோம் என்றும் உளமார உறுதியளிக்கிறோம் என்றும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.