மதுரை தெற்கு வாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற நபரை கைது செய்த B 5, காவல்நிலைய போலீசார்
மதுரை மாநகர், தெற்குவாசல் B5, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. P.சோமு அவர்கள் நேற்று சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து சென்றபோது பச்சரிசிக்கார தெரு, கிருஷ்ணா சலூன் அருகே ஒரு நபர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது, உடனே அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவன் மதுரை, தெற்குவாசல் பாப்பன் கினற்று சந்தை சேர்ந்த நாகலிங்கம் மகன் பரமேஸ்வரன் வயது 35/21, என தெரியவந்தது. அவன் அரசால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான புகையிலை பொருட்களை விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டதின் அடிப்படையில் அவனை கைது செய்து அவனிடமிருந்து ரூ.2500/− மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவனை நிலையம் அழைத்கு வந்து அவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.