

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு
மதுரை சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.
அ. தங்கமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மதுரை சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மதுரை தெப்பகுளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் படிகளில் நின்று பயணம் செய்வதின் மூலம் ஏற்படும் ஆபத்தினை எடுத்துரைத்து அறிவுரை வழங்கி பேசினார்.
