
மதுரை, செல்லூர் பகுதியில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில் எந்த பொருளும் திருடப்படாத அதிசாயம்
மதுரை மாநகர் செல்லூர் D2, குற்றப்பிரிவு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் கட்டபொம்மன் நகர், பாண்டியன் தெருவில் தன் தாயார் முருகேஸ்வரியுன் வசித்து வருபவர் S.அஜய்குமார் வயது 22/21, இவர் சர்வேயர் காலனியில் தோனி பாய் ஓட்டலில் வேலை செய்து வருகிறார் இவரது தாயார் முருகேஸ்வரி செல்லூர் அய்யனார் கோவில் சர்ச் தெருவிலுள்ள சரவணாபுக் பைண்டிங் கம்பெனியில் வேலை செய்து வருகிறார், மேலும் இவருக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை, இவர் தினசரி காலை 11.30 மணிக்கு போய்விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்புவார், இவரது தாயார் முருகேஸ்வரி காலை 9.30 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம், இந்த நிலையில் கடந்த 21 ம் தேதி காலையில் 9.30 மணிக்கு இவரது தாயார் வேலைக்கு சென்ற பிறகு இவர் 11.30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார் அதன் பின் இவரது அம்மா முருகேஸ்வரி மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு வந்த போது வீட்டில் கதவில் பூட்டு இல்லாமலும் பூட்டு மாட்டும் கொண்டி நெழிந்த நிலையில் இருந்தது, இதனை கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டிலுள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது, மற்றும் துணிமணிகள் கீழே சிதறி கிடந்துள்ளது. உடனை அவர் தன் மகனுக்கு தகவல் கூறி அவரும் வந்து பார்த்ததில் எந்த பொருளும் களவு போக வில்லை, என தெரிந்தது, இருந்த போதிலும் பூட்டை உடைத்து உள்ளே சென்றது யார்? எதற்காக சென்றனர் எனபது பற்றி விசாரிக்க கோரி செல்லூர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர், புகாரை பெற்றுக் கொண்ட சார்பு ஆய்வாளர் திரு. ஆண்டவர் அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.
