
தூத்துக்குடி மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாள் மற்றும் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காமராஜ் கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி 31.10.2019-ம் தேதியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாணவர்களிடத்தில் பேசுகையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்வது முக்கியம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கக் கூடாது, சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.