
சென்னையில் சைபர் குற்றங்களை குறைக்க புதிய சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையர் நியமிக்க பரிந்துரை
சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதலாக 42, 000 CC TV அமைக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சென்னை மாநகர் முழுவதும் 1.40 லட்சம் சிசிடிவிகள் பழுது நீக்கி புதுபிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் குற்றங்களை தடுக்க மேலும் 4 புதிய சைபர் குற்றத்தடுப்பு காவல்நிலையங்கள் ஏற்படுத்தும் திட்டம் உள்ளது எனவும் சைபர் புலனாய்வு பிரிவுக்கு என தனி துணை ஆணையர் நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
