
சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்தை ஐ.ஜி பார்வையிட்டார்
சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்தை ஐ.ஜி பார்வையிட்டார்
சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கின்ற இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் ( ஆண் & பெண் ) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும் இடத்தை சீருடை பணியாளர் தேர்வாணைய காவல்துறை தலைவர் 10.07.2021 – ம் தேதி ஆய்வு மேற்கொண்டார்
தமிழக காவல்துறையில் 2020 – ஆம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 11741 + 72 ( BL ) இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் ( ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு எதிர்வரும் 26.07.2021 ( திங்கள் கிழமை ) அன்று நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி தேர்வு மொத்தம் 1404 நபர்களுக்கு (890 – ஆண்கள் 514 – பெண்கள்) நடைபெற உள்ளது. இதில் அடிப்படை உடற்தகுதிகளான பெண்களுக்கு ( உயரம் , 400 மீட்டர் ஓட்டம் ), ஆண்களுக்கு ( உயரம், மார்பளவு, 1500 மீட்டர் ஓட்டம் ) போன்றவையுடன் கயிறு ஏறுதல், 100 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல், பந்து எறிதல் ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடைபெற இருக்கின்றன.
உடற்தகுதி தேர்வுகள் நடைபெற இருக்கும் இடங்களை இன்று 10.07.2021-ஆம் தேதி கார்த்திகேயன் இ.கா.ப., காவல்துறை தலைவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் பார்வையிட்டனர்
மேலும் ஆயுதப்படை மைதானத்தில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப., எடுத்து கூறினார்
