ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பரிசு – கோவை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு
ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பரிசு – கோவை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு
கடந்த 8.7.2021 ஆம் தேதி இரவு, கோவை கணபதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது பணி முடித்து வீட்டிற்கு செல்லும்போது, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 6-வது வீதியில் பணம் ரூ. 51,430, செல்போன், காசோலைகள் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் அடங்கிய தனது கைப்பையை தவற விட்டு சென்று விட்டார்.அப்போது அவ்வழியே வந்த கோவை வேலாண்டிபாளையத்தை சார்ந்த பயணிகள் ஆட்டோ (TN66 Q 7196) ஓட்டுநர் விஜயகுமார் என்பவர் கண்டெடுத்து அருகிலுள்ள காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர் மேற்படி கைப்பையை உரிமையாளர் ஸ்ரீதேவி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டி கோவை மாநகர காவல் ஆணையர் பரிசு வழங்கி கௌரவித்தார். பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளில் நடைபெறும் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் பற்றியும், கோவை மாநகர காவல்துறைக்கு தகவல்களை பகிர்ந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தங்களுடைய தகவல்கள் இரகசியம் காக்கப்படும்.
கோவை மாநகர காவல்துறையை தொடர்பு கொள்ள: 📞 0422-2300970 மற்றும் 📱9498181213 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாகவும், 8190000100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும், மின்னஞ்சல்📧 வழியாக தகவல் தெரிவிக்க விரும்புவோர்: controlroomcbecity@gmail.com என்ற முகவரியிலும், சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள Twitter : @policecbecity வழியாகவும் Facebook : @cbecitypoliceofficial மூலமும் காவல்துறைக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது