மதுரை, திருநகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது, திருநகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை டவுன், திருநகர் W1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு ராஜ்குமார் அவர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கருப்பையா மற்றும் மு.நி.க. லெக்ஷிமணன் ஆகியோர், நேற்று சரக ரோந்து பணியில் இருந்த போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருநகர் 5 வது பஸ் ஸ்டாப் டீச்சர்ஸ் காலனி அருகில் சென்றனர் அங்கே மர்மநபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் இருந்துள்ளார் அவர் போலீசாரை கண்டவுடன் தப்பியோட எத்தனித்தார் உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் அவர் சீனிவாசா காலனி விருமாண்டியின் மகள் ராணி வயது 76, என தெரியவந்தது, அவரிடம் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மதியை மயக்கும் போதை பொருளான கஞ்சா விற்பனைக்காக 50 பொட்டலங்கள் மொத்தம் 350 கிராம் எடை கொண்டவை வைத்திருந்தார், அதை பறிமுதல் செய்து அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.