Police Recruitment

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் நாகநாதன் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி ஊக்கப்படுத்தி வெகுமதி வழங்கினார்.
தமிழக காவல் துறையில் காவலர் நாகநாதன் பாண்டி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுக்காவில் உள்ள சிங்கபுலியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவர் தற்போது சென்னை மாநகர காவல் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் அனைத்து இந்திய காவல்துறை விளையாட்டு போட்டியில் 4 x 400 பிரிவில் தடகள பந்தயத்தில் முதலிடம், மாநில அளவில் 46.61 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்க பதக்கம் வென்றார்.
மேலும் Granfix போட்டிகளில் 47.00 நொடிகளில் தங்க பதக்கமும் மற்றும் Federation கோப்பை போட்டியில் 46.09 நொடிகளில் வெள்ளி பதக்கமும், தமிழ்நாடு முதலமைச்சர் தடகள போட்டியில் 47.00 நொடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்தியா சார்பில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் நாகநாதன் பாண்டியின் தந்தை, பாண்டி மற்றும் தாய் பஞ்சவர்ணம் இருவரையும் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தனது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும் காவல் துறையின் சார்பில் அவர்களுக்கு சிறப்பு உதவிகளையும் வழங்கினார். சுமார் 41 வருடங்கள் கழித்து தமிழ்நாடு காவல் துறையில் இருந்து தடகள வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1980 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் என்பவர் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு பெருமை சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.