மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த செல் போன் கடை விற்பனையாளர்களை கைது செய்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார்
மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B 6, காவல்நிலைய எல்லைகுட்பட்ட பகுதியான மதுரை ஜெய்ஹிந்துபுரம், சோலை அழகுபுரம் 1வது தெரு, திருப்பதி நகர் 2 வது தெரு, அரக்காயி காம்பவுண்டில் குடியிருக்கும் பழனிச்சாமி தேவர் மகன் நாட்ராயன் வயது 45/21, இவர் கடந்த 29 ம் தேதியன்று மதுரை ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு செல்வா டிம்பர் பக்கத்தில் வந்து கொண்டிருக்கும்போது, மதுரை, ஜெய்ஹிந்து புரம் ஜீவா நகர் 2 வது தெரு அங்கயர்கன்னி 5 வது தெருவில் குடியிருக்கும் முருகன் மகன் வைரமுத்து வயது 25/21, மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் கோபிநாத் வயது 18/21, இவர்கள் செல் போன் விற்பனை செய்யும் கடையில் விற்பனையாளர்களாக இருந்தவர்கள் ஆகிய இருவரும் நாட்ராயன் வயது 45/21, என்பவரை வழி மறித்து எங்களுக்கு தண்ணியடிக்க காசு கொடுக்க வேண்டும் இல்லையெனில் உன்னை குத்தி கொன்று விடுவேன் என மிரட்டி அவர் சட்டை பையின் வைத்திருந்த ரூ. 260 ஐ பறித்து கொண்டு ஓடினர், இதை தடுக்க வந்தவர்களையும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடினர், அதன்பின் நாட்ராயன் அவர்கள் மதுரை ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார், புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சோமசுந்தரம் அவர்கள் வழக்கு பதிந்து மேற்படி நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
