
காரிமங்கலம் காவல் ஆய்வாளருக்கு 77-வது சுதந்திர தினத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ்
தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கு 77 வது சுதந்திர தினமான இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அதில்,காரிமங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு வெங்கட்ராமன் அவர்கள் குற்றவழக்கில் எதிரிகளைப் பிடிக்க மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்று எதிரிகளை கைது செய்து நீண்ட வருடங்களாக நிலுவையில் இருந்த பிடியாணையை நிறைவேற்றியுள்ளார்.
மேலும் காரிமங்கலம் காவல் நிலைய குற்ற வழக்கில் எதிரியை கைது செய்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து தற்போது சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் மேற்படி வழக்கில் வழக்கின் சொத்தினை அழிப்பதற்கான ஆணையையும் பெற்று சிறப்பான பணி செய்துள்ளதால் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் திரு வெங்கட்ராமன் அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நற்சான்றிதழனை வழங்கினார்.
