மதுரை, திருநகர், விளாச்சேரி மெயின் ரோட்டில் அரசால் தடை செய்யப்பட்ட கனேஷ் புகையிலையை, பறிமுதல் செய்து வழக்கு தொடர்ந்த திருநகர் போலீசார்
மதுரை திருநகர் W 1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள், நிலைய ஆய்வாளர் திருமதி, அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது கிடைத்த ரகசிய தகவலின்படி திருநகர், விளாச்சேரி மெயின் ரோட்டில் உள்ள பிரகாஷ் டீ கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய புகையிலை பொருட்கள் கனேஷ் புகையீலை பாக்கெட் 15 விற்பனை செய்வதற்காக அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் ராஜசேகரன் வயது 42/21 வைத்திருந்ததை பறிமுதல் செய்து மேலும் குற்றத்தை அவர் ஒப்பு கொண்டதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
