மார்க்கெட் ஏலம் எடுக்கும் தகராறில் மதுரை வாலிபரை கொன்ற கும்பல
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் அறிவழகன் என்ற வினித் (வயது 29). இவர் மீது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
குற்ற வழக்குகள் தொடர்பாக அறிவழகன் காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் தினமும் கையெ ழுத்திட்டு வந்தார். இதற்காக அவர் தனது ஆதரவாளர்களுடன் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
நேற்று போலீஸ் நிலையத் திற்கு கையெழுத்திடச்சென்ற அறிவழகனை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரிமாரியாக வெட்டி கொலை செய்தது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் காரைக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட னர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளின் அடிப்படையில் கொலை யாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மார்க்கெட் ஏலம் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் பிரச்சினை தொடர்பாக அறிவழகன் கொலை செய்யப்பட்டு ள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், விருதுநகர் நகராட்சி மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாகவும் அறிவழகனின் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த வருடம் விருதுநகர் நகராட்சி மார்க்கெட்டை ஏலம் எடுக்க அறிவழகன் குடும்பத்தினர் தீவிர முயற்சி எடுத்தனர்.
இதையறிந்த எதிர்தரப்பி னர் மார்க்கெட்டை ஏலம் எடுத்தால் உங்கள் குடும்பத்தில் கொலை விழும் என நேரடியாகவும், மறைமுகமாக வும் மிரட்டி வந்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அறிவழகன் தரப்பினர் மார்க்கெட் ஏலம் எடுக்க முயற்சி மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் அறிவழகனை ஓட, ஓட விரட்டி கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக மையிட்டான் பகுதியை சேர்ந்த ஆதி நாராயணன், மேக்ஸ் என்ற கருப்பையா, தனுஷ், குமார வேல், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மதுரை, சிவகங்கை பகுதிகளில் கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.