கடையநல்லூர் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடையநல்லூர் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட
திரிகூடபுரம் கிராமத்தில் காந்தி காலனியில் குடியிருக்கும் கடையநல்லூரை சேர்ந்த முகம்மது கோதரி மகன் முகம்மது மீத்தீன் வயது (53) இவர் கடந்த 2ம் தேதி கடையநல்லூர், சொக்கம்பட்டி, புளியங்குடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதாக சொக்கம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.இவர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக 8 வழக்குகள் உள்ளது மேலும் இவரின் பெயர் ரவுடி பட்டியலிலும் இருந்தது. இவர் தொடர்ந்து கடையநல்லூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ்க்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று முகம்மது மீத்தீனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.
